"பிள்ளைக்கு பேர் வச்சியே சோறு வச்சியா?" - "ஸ்டிக்கர்களின்" லிஸ்ட் போட்டு கிழித்தெடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

 
தங்கம் தென்னரசு

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "எடப்பாடி ஒரு அறிக்கையை வெளியிட்டு, அதிமுகவின் திட்டங்களுக்கு, திமுக அரசு தன்னுடைய ஸ்டிக்கர்களை ஒட்டுகிறது என்று ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை கூறியுள்ளார். இப்படி ஒரு ஸ்டிக்கரை ஒட்டும் கலாச்சாரத்தை துவக்கி வைத்தது யார் ஆட்சி? ஒரு ஆட்சியே, ஸ்டிக்கர் ஆட்சி என்று மக்களாலே சொல்லப்பட்ட ஆட்சி, அதிமுக ஆட்சி என்பதை எடப்பாடி மறந்து விட்டாரா?  2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தொடங்கினார்கள்.

தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள்: `சிலருக்கு வயிறு எரிவதைப் பற்றிக் கவலை  இல்லை' -தங்கம் தென்னரசு | Minister Thangam thennarasu press meet regarding  tamilnadu archaeology projects

கலைஞர் பெயரை மறைத்து ஸ்டிக்கர் ஒட்ட ஆரம்பித்து, திருவள்ளுவர் படத்தையே ஸ்டிக்கர் போட்டு மறைத்தார்கல். கஜா புயல் அவர்கள் ஆட்சியிலே வந்து, சென்னையே பெருவெள்ளத்தில் மூழ்கியபோது, பல்வேறு இடங்களில் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள் ஒவ்வொரு இடத்திற்குச் சென்று அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியபோது, அப்படி தனியார் செய்யக்கூடிய அந்த நிவாரணப் பொருட்களில்கூட அதிமுக-வினரை வைத்து தங்கள் ஸ்டிக்கரை ஒட்டினார்கள். பொங்கலுக்காக கொடுக்கப்பட்ட கரும்பின் ஒவ்வொரு கரும்புக் கணுக்களில்கூட ஸ்டிக்கரை ஒட்டி விளம்பரப்படுத்திக் கொண்ட ஆட்சி அதிமுக ஆட்சி தான்.

கேரளாவிற்கும் ஸ்டிக்கர் தான்!!! கதி கலக்கும் அதிமுகவினர்...

இன்றைக்கு திமுக ஆட்சியில், பொங்கல் பையாக இருந்தாலும், எந்தப் பரிசாக இருந்தாலும், அதில் முதலமைச்சருடைய ஒருபடம் கூட இருப்பதில்லை.  எனவே, அவர்களைப் போல ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால், திமுகவால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் எல்லாம், அவர்கள் எந்த அளவுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் என்பதற்கு நான் விளக்கங்களை சொல்லியாக வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 2008ஆம் ஆண்டு கலைஞர் கொண்டு வந்த மிகப்பெரிய, மகத்தான திட்டம். அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின்.

புதிய தலைமைச் செயலகம்: மக்களின் வரிப்பணத்தை வீணாக்கிய விசாரணை -  உயர்நீதிமன்றம் கண்டனம் - BBC News தமிழ்

அவர் ஜப்பானுக்கு சென்று சீரிய முயற்சிகளை மேற்கொண்டு அவர்களிடமிருந்து நிதியைப் பெற்று நேரடி கண்காணிப்பிலிருந்து, 95 விழுக்காடு பணிகளை நிறைவேற்றினார். ஆட்சிப்பொறுப்பிலிருந்து நாங்கள் விலகிய பிறகு, 2013-ஆம் ஆண்டில், 5 சதவீதப் பணியை மட்டும் அவர்கள் பார்த்து, குழாயில் தண்ணீரை மட்டும் அவர்கள் திறந்துவைத்து விட்டு, அதில், இதை ஏதோ அதிமுக செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டதை மக்கள் மறக்கமாட்டார்கள். கலைஞரால் உருவாக்கப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை, ஆட்சிக்கு வந்தவுடன் அதைத் திறந்து வைத்து, தங்கள் பெயரை ஸ்டிக்கரை ஒட்டினார்கள்.  Know Your Leader | In 1st Election Without Patriarch Karunanidhi, MK Stalin  Captain Of The DMK-Cong Ship In Tamil Nadu

அதுமட்டுமா? கலைஞருடைய கல்வெட்டை எடுத்துவிட்டு, ஏதோ அதிமுக தான் உருவாக்கியதை போல நாடகம் ஆடினார்கள். புதிய தலைமைச் செயலகக் கட்டடம், கலைஞர் உருவாக்கிய கட்டடம். அதில் ஓமந்தூரார் மருத்துவமனை என்று போட்டு, ஏதோ பெரிய மருத்துவமனையை தாங்கள்தான் அங்கே உருவாக்கியதைப்போல ஸ்டிக்கர் ஒட்டினார்கள். 2011ஆம் ஆண்டில் துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின், 10 அரசு கலைக்கல்லூரிகளுக்கான எல்லா பணிகளையும் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே முடித்து வைத்தார்.

ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அந்த 10 கல்லூரிகளை திறந்துவிட்டு தாங்கள் கொண்டுவந்ததாக நாடகத்தை ஆடி, அதன் மீது அதிமுக ஸ்டிக்கரை ஒட்டினார்களே, அப்போது, இப்போது இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்றைக்கு அமைச்சராக அங்கே அமர்ந்துகொண்டுதானே அதை பார்த்துக் கொண்டிருந்தார். ஆகவே ஸ்டிக்கர் ஒட்டக்கூடிய இந்த கலாச்சாரம் என்பது, உங்கள் ஆட்சியில் உங்களாலே உருவாக்கப்பட்டது. நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தீர்களேயொழிய, சோறு வைத்தீர்களா ?

நிவாரண பொருட்களை மிரட்டி பறிக்கும் அதிமுகவினர் - ஜெ. படம் ஒட்டி அட்டூழியம்-  கொதிக்கும் மக்கள் | ADMK workers busy with sticking Amma stickers in Flood  relief materials ...

எனவே உங்களுடைய திட்டங்களுக்கு, நாங்கள் எங்களுடைய புகழை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஒருபோதும் இல்லை. திமுக ஒரு பெரிய ஆலமரம். ஆனால், அதிமுக என்பது ஒரு காந்தாரி மரம். திமுக, திமுக திட்டங்கள் என்பதெல்லாம் கோடி சூரியனுக்கு சமம். அதற்கு வெளிச்சம் பிற இடத்திலிருந்து தேவையில்லை. திமுகவின் ஒளி, வேறு சில உதிரி நட்சத்திரங்களுக்குத் தேவைப்படுமே தவிர, திமுகவிற்கு தேவையில்லை. விதைக்கிற நேரத்தில் வெளியூருக்குச் சென்றுவிட்டு, அறுக்கின்ற நேரத்தில் நாங்கள்தான் இருக்கிறோம் என்று அரிவாளை தூக்கிக் கொண்டுவர கூடாது” என்றார்.