"காங்கிரஸ் தலைவர் பதவியை விஜய்க்கு வழங்க முன்வந்தேன்"- தங்கபாலு

 
கே.வி.தங்கபாலு

2009-ல்   என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு கே.வி.தங்கபாலு பதிலடி கொடுத்துள்ளார். 

விஜய் நீண்ட காலத்திற்கு முன்பே காங்கிரஸில் இணைய விரும்பினார், ஆனால் நமது தலைவர்கள் அவரைத் தடுத்துவிட்டனர் எனக் கூறிய மாணிக்கம் தாகூரின் கருத்துக்கு தமிழ்நாடு காங். முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு பதில் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக தங்கபாலு கூறுகையில், "2009ல் விஜய் ராகுல் காந்தியை சந்தித்த போது, அவருக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை வழங்கலாம் என்று நான் பரிந்துரைத்தேன். அதையும் தாண்டி, அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது குறித்தும் விவாதித்தோம். அதுமட்டுமின்றி, அவருக்காக எனது தமிழ்நாடு காங். தலைவர் பதவியைக் கூட விட்டுக் கொடுக்கத் தயார் என்று தேசியத் தலைமையிடம் தெரிவித்தேன்" எனக் கூறினார்.