'தம்பி விஜய்-யின் நல்ல முன்னெடுப்பு’: 'சிங்கப்பெண் படைக்கு கமல் வாழ்த்து..!
சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே சிங்கப்பெண் துறையின் முதன்மை நோக்கமாகும். குறிப்பாகப் பொது இடங்கள் மற்றும் போக்குவரத்துகளில் நடக்கும் பின்வரும் குற்றங்களைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இப்படை பிரத்யேகமாகச் செயல்படும்:
பெண்களைப் பின்தொடர்ந்து தொல்லை தருவது (Stalking) மற்றும் பாலியல் ரீதியான சீண்டல்கள்.
*பெண்களைக் குறிவைத்துத் தொடர்ந்து அச்சுறுத்துவது மற்றும் கடத்தல் முயற்சிகள்.
*பேருந்துகள், பொது இடங்கள், மக்கள் கூட்ட நெரிசல் மிகுந்த திருவிழாக்கள் போன்ற இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநாகரிகமான அத்துமீறல்கள்.
தமிழக அரசின் இந்த மிகச்சிறந்த முன்னெடுப்பை வரவேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்" என்று தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது…
— Kamal Haasan (@ikamalhaasan) June 9, 2026

