3 நாட்களாக கடும் போக்குவரத்து நிலவிய தாம்பரம் ஜிஎஸ்டி சாலை வெறிச்சோடியது

 
ட்ராபிக்

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் சென்னையிலிருந்து புறப்பட்டதால் கடந்த 3 நாட்களாக கடும் போக்குவரத்து நிலவிய தாம்பரம் ஜிஎஸ்டி சாலை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது அதற்காக சென்னையில் தங்கியுள்ள தென் மாவட்டங்களை சேந்தவர்கள் வியாழன், வெள்ளி, சனிக்கிழமை என தொடர்ச்சியாக தென் மாவட்டங்களை நோக்கி சொந்த மற்றும் அரசு பேரூந்துகளில் பயணம் மேற்கொண்டனர், இதனால் ஜி.எஸ்.டி சாலை  பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இன்று தீபாவளி பண்டிகை என்பதால் ஏற்கனவே தென்மாவட்டங்களுக்கு வாகனங்கள் சென்ற நிலை உள்ளூர்  நபர்களும் வீட்டில் குடும்பத்துடன் தீபாவளி கெண்டாடி வருவதால் ஜி.எஸ்.டி சாலை வெறிச்சோடி காணப்படுகிறது ஆட்கள் நடமாட்டமும் குறைந்துள்ளது ஆங் ஒன்று இங்கு ஒன்றாக வாகனங்கள் செல்கிறது. அதே வேலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடிவிட்டு மீண்டும்  அதிக வாகனங்களில் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்தால் நாளை மாலை முதல் நாலை மறுநாள் பிற்பகல் வரை மீண்டும் நெரிசல் ஏற்படலாம் என அதற்காக ஒழுங்கு படுத்தும் பணியிம் போக்குவரத்து போலீசார் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.


ஒரே நேரத்தில் ஊருக்கு சென்று தீபாவளி கொண்டாடுராங்க, மீண்டும் ஒரே நாளில் சென்னைக்கு திரும்புநாங்க இதனால் போறபோக்கில் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை தான் திக்கு முக்காடுகிறது.