குழந்தைக்கு ‘தமிழரசி’ என பெயர்சூட்டிய விஜய்

 
விஜய்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில்  2 மாத கைக்குழந்தைக்கு தமிழரசி என பெயர்சூட்டினார் தளபதி விஜய்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நடிகர் விஜய் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கிவருகிறார். சென்னை திருவான்மியூரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 19 மாவட்ட மாணவர்களுக்கு விருது வழங்கிவருகிறார் விஜய்.725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்றுள்ளனர். த.வெ.க. நிர்வாகிகள் மாணவர்கள், பெற்றோரை பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர்.


கல்வி விருது வழங்கும் விழாவில் 2 மாத பெண் குழந்தைக்கு அதன் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று ‘தமிழரசி’ என பெயர் சூட்டிய தவெக தலைவர் விஜய். தலைவர் கையால் பெயர்சூட்ட வேண்டும் என்பதற்காகவே தன் மகளுக்கு பெயர்சூட்டாமல் காத்திருந்ததாக தந்தை கூறினார்.