முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்!!

 
tn

முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 

tn

 தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம்.  பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் . மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும் . மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம்.

tn

இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவையொட்டி  பழனியில்  பக்தர்கள் சூரிய உதயத்தை வழிபட்டனர். திருச்செந்தூர் கோயில் முதல் கடற்கரை வரை அரோகரா முழக்கமிட்டு பக்தர்கள் வழிபடு நடத்தினர். முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.