தை அமாவாசை: நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!

2023 ஆம் ஆண்டு பிறந்து முதல் மாதமான தை மாதத்தில் வரும் தை அமாவாசை மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆண்டில் மூன்று அமாவாசைகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அது தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகும். இந்த 3 அமாவாசைகளின் போதும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நாளாகும்.
தாய் அமாவாசை நாளில் நம் முன்னோரை நினைத்து தர்ப்பணம் கொடுக்கவேண்டும். நீர்நிலைகள் பகுதியில் தான் இதை செய்வது வழக்கம். நகரங்களில் இருப்போர் கோயில் குளங்களுக்குச் சென்று இந்நாளில் தர்ப்பணம் கொடுக்கலாம். அதேபோல் அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து படையல் போட்டு வழிபடுவது நல்லது.
இந்நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அக்னிதீர்த்த கடலில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர். அதேபோல் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மக்கள் கோவில் குளங்கள், கடற்கரை பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.