திருவள்ளூர் அருகே பயங்கர ரயில் விபத்து.. நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதி விபத்துக்குள்ளானது.
▶️மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
▶️ பெரம்பூரில் இருந்து 7.44 அளவில் புறப்பட்ட இந்த ரயில், 8.27 மணியளவில் கவரைப்பேட்டை அருகே வந்துள்ளது
▶️ தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது
▶️ வேகமாக மோதியதால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்து வருகின்றன
▶️ முதல் கட்டமாக சிக்னல் கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்ததாக தகவல்
▶️ பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல்
▶️ ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள், மீட்புகுழுவினர் விரைந்துள்ளனர்
▶️ கவரைப்பேட்டை அருகே உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் பிரபுசங்கர் தகவல்
▶️ திருவள்ளூர் அருகே ரயில் விபத்து காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் நிறுத்திவைப்பு