ஈரோட்டில் இரவு 8 மணிக்கு கேட்ட பயங்கர சத்தம்- உடல் சிதறி 2 பேர் பலி

 
ஆ

ஈரோடு மாவட்டம் கோபி அருகே டி.என் பாளையத்தில் கல்குவாரி வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள  டி.என் பாளையத்தில் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இரவு 8 மணியளவில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்த இரு தொழிலாளர்களும் வெளியூரில் இருந்து வேலைக்கு வந்தது தெரியவந்துள்ளது.


தகவலறிந்து நிகவிடத்துக்கு சென்ற போலீசார், கல்குவாரி உரிமையாளர் ஈஸ்வரி, கணவர் லோகநாதன் மற்றும் மற்ற தொழிலாளர்களை தேடிவருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பங்களாபுதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.