ஓட்டல் தொழிலில் பயங்கர நஷ்டம்- உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
குன்றத்தூரில் ஓட்டல் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குன்றத்தூர், மேத்தா நகர், மேற்கு தெருவை சேர்ந்தவர் ராம்குமார்(42), குன்றத்தூரில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வந்தார். இவரது மனைவி கனிமொழி இரவு அறைக்குள் சென்ற ராம்குமார் நேற்று அதிகாலை வரை அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கதவை தட்டி பார்த்தும் வெளியே வராததால் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராம்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன ராம்குமார் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குன்றத்தூரில் ஓட்டலை நடத்தி வந்த ராம்குமார் கடந்த ஓராண்டுக்கு முன்பு குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளைப் பகுதியில் புதிதாக ஹோட்டலை தொடங்கினார். அதில் சரியாக வியாபாரம் நடக்காததாதால் அந்த ஓட்டலை மூடியுள்ளார். இதனால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தவர் நேற்று தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும் மேலும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.