வி.சி.க மாநாட்டில் பரபரப்பு: கூட்ட நெரிசலால் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்..!

 
1

 

உளுந்தூர்பேட்டை வி.சி.க மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் காணப்பட்ட திருமாவளவன்....இதன் காரணமாக  பாதியிலேயே பேச்சை முடித்துச் சென்றதால் பரபரப்பு.

உளுந்தூர்பேட்டையில் வி.சி.க சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ நடைபெற்றது. நேற்று திருமாவளவன் பிறந்த நாள் என்பதால் இந்த சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த மாநாட்டை முன்னிட்டு கடந்த 1 மாத காலமாக மாவட்ட வாரியாக விசிக மண்டல செயற்குழு கூட்டங்கள் நடைபெற்றது. அந்த கூட்டங்களில் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது கட்சித் தொண்டர்களுக்கு எடுத்துரைத்தார்.இந்த மாநாட்டால் உளுந்தூர்பேட்டை பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

 

இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த மாநாட்டில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தீபம் ஏந்தி ரேம்ப் வாக் செய்தார். அதனை தொடர்ந்து திருமாவளவன் உரை நிகழ்த்தினார். காலை முதலே மாநாடு நடைபெறும் இடத்துக்கு விசிக தொண்டர்கள் குவிந்து வந்ததால் மாநாட்டில் கடும் கூட்டம் ஏற்பட்டது.

மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

தமிழர்களின் மொழி, இன மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க, இலக்கியம் மற்றும் பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மாநிலங்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்த மாநாடு மூலமாக மத்திய அரசிடம் வலியுறுத்துகிறேன்.

ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே அரசு, ஒரே ஆட்சி, ஒரே கட்சி என்கிற ஆதிக்க அரசியலை முற்றிலுமாக நிராகரித்து, மதச்சார்பற்ற, சமத்துவ ஜனநாயக இந்தியாவைக் கட்டியெழுப்ப வேண்டும். பிற மொழி மற்றும் இன மக்களைப் பகையாகக் கருதாமல் அனைத்து தேசிய இனங்களின் எழுச்சிக்கும், ஐக்கியத்திற்கும் துணைநின்று கூட்டாட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்த மாநாடு உறுதியேற்கிறது.

தமிழகத்தின் ஆளுங்கட்சியாக விசிக வளர வேண்டும்; இத்தனை காலம் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தோம். திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆளும் கட்சி; இன்று அன்பு சகோதரர் ஜோசப் விஜயுடன் கூட்டணி வைத்துள்ளோம். விசிகவும் தவெகவும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்; விசிகவும் ஆளுங்கட்சியாக பரிணமிக்கும்.

கட்டுக்கடங்காமல் அரங்கத்தில் உள்ள கூட்டத்தைவிடவும் வெளியே லட்சக்கணக்கான சிறுத்தைகள் திரண்டு இருக்கிறார்கள். உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில் உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இந்த இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
 

மாநாட்டு மேடையிலும் தொண்டர்கள் குவிந்ததால், மேடையில் இருந்த திருமாவளவன் டென்ஷனாகி தொண்டர்களை காட்டமாக பேசி அங்கிருந்து கீழே அனுப்பி வைத்தார். விசிக மாநாட்டில் கட்டுக்கடங்காத அளவிற்கு கூட்டம் குவிந்ததால் நெரிசல் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதியிலேயே பேச்சை முடித்து திருமாவளவன் முடித்துக் கொண்டார். 

 


 

null