பணம் மாயமான விரக்தியில் கூலி தொழிலாளி தற்கொலை
Jan 28, 2025, 10:14 IST1738039487776

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வீட்டில் இருந்த பணம் மாயமான விரக்தியில் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மாரியப்பன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டில் இருந்த 22 லட்சம் ரூபாய் பணத்தை காணவில்லை என கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் கூலி தொழிலாளியான மாரியப்பன் வீட்டில் 22 லட்சம் ரூபாய் எப்படி வந்தது என போலீசார் சந்தேகம் அடைந்தனர். மேலும் அவரது புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தனது பணம் கிடைக்காததால் விரக்தியில் இருந்த மாரியப்பன் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளார். இதனையடுத்து விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார், மாரியப்பன் கூறியது உண்மைதானா? அப்படி இருந்தால் அவருக்கு 22 லட்சம் எப்படி வந்தது? ஒருவேளை மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்