உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடல் - அண்ணா பல்கலை. அறிவிப்பு!!

 
anna university

உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

annaஅண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் கட்டடவியல் மற்றும் இயந்திரவியல் ஆகிய தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகளை ரத்து செய்யப்படுவதாக அண்ணா  பல்கலைக்கழக கல்வி படிப்புகளுக்கான மையத்தின் இயக்குனர் ரோஸிமின் திலகர் உத்தரவிட்டுள்ளார்.  6 உறுப்பு கல்லூரிகளில் மொக்கானிக்கல், சிவில் குரூப்களில் ஆங்கில பாடப்பிரிவுகளும் தற்காலிகமாக மூடப்படுகிறது என்றும் மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக நடவடிக்கை என தகவல் வெளியாகியுள்ளது. 

tn

ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை,  நாகர்கோவில்,  தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் கட்டடவியல் மற்றும் இயந்திரவியல் தமிழ் வழி பொறியியல் பாடப் பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், தூத்துக்குடி ராமநாதபுரத்தில் இயந்திரவியல் பிரிவில் ஆங்கில மொழியும் ,அரியலூரில் கட்டடவியல் பிரிவில் ஆங்கில வழியும் ,  பட்டுக்கோட்டை,  திருக்குவளையில்   இயந்திரவியல் , மின்னியல் மற்றும் மின்னணுவியல் ஆகிய பாடங்களின் ஆங்கில வழியும் ரத்து செய்யப்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது