தவெக அரசின் அடுத்த அதிரடி! கனிமவள பொருட்களை வெளிமாநிங்களுக்கு கொண்டு செல்ல தற்காலிக தடை
கனிமவள பொருட்களை வெளிமாநிங்களுக்கு கொண்டு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து குண்டுக்கல் ஜல்லிக்கற்கள் மற்றும் எம்சாண்ட் போன்ற கனிம வளங்கள் வழி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தில் கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட கோரிகளில் இருந்து தயார் செய்யப்படும் கனிம வளங்கள் பெரும்பாலானவை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விற்கப்படுகிறது. அங்கு கூடுதல் விலை கிடைப்பதாலும் மேலும் அங்கு குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் கனி வளங்கள் அங்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால் இங்கிருந்து கனிம வள கட்டுமான பொருட்கள் தாராளமாக செல்கிறது. இங்கு தட்டுப்பாடு உள்ள நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கொண்டு செல்வதால் தமிழகத்தில் கட்டுமான பணிகள் முடங்கிப் போய் உள்ளது. எனவே வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதை பரிசீலனை செய்து அமைச்சர டி கே பிரபு தற்போது கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தற்காலிக தடை விதித்து அரசு உத்தரவிட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

