தமிழக ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு கோவில் அர்ச்சர் மறுப்பு!

 
tn

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலில் அடக்குமுறை போன்ற சூழலை, தான் கண்டதாக ஆளுநர் ரவி கூறியிருந்த நிலையில், அதற்கு அக்கோயில் அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை வெளியிட்டிருந்த் பதிவில்,  சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர்  திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்  உள்ளது. பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப்  புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும்  பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது என தெரிவித்து இருந்தார். 

rn ravi

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டிற்கு கோதண்டராமர் கோவில் அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.  இது தொடார்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்த கோயிலில் அர்ச்சகர் ஒருவர் கூறுகையில், எந்த அடக்குமுறையும் இல்லை. இன்று சிறப்பு பூஜை நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடு செய்ய இரவு நாங்கள் தூங்கவில்லை, அதனால் முகம் சோர்வாக காணப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.