நீண்ட நாள்களுக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி..!

 
1

பிரதமர் நரேந்திர மோடியுடன், மத்திய அமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. ராம்மோகன் நாயுடுவும் பதவியேற்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நீண்ட நாள்களுக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. எல்லையற்ற மகிழ்ச்சி. மத்திய அரசின் தனிக் கவனம் எங்கள் மீது உள்ளது.

“தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை, பாஜகவுடனான எங்களின் உறவு வலுவாக உள்ளது. இடஒதுக்கீடு குறித்த எங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை,” என்று தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.யும் மத்திய அமைச்சருமான ராம்மோகன் நாயுடு கிஞ்சராபு, 36, தெரிவித்துள்ளார்.

“ஆந்திராவின் முன்னேற்றமே எங்களின் நோக்கம். ஆந்திரா, தெலுங்கானாவில் வசிக்கும் தெலுங்கு மக்களின் நலனுக்காக நாங்கள் சிறந்த பங்காற்றுவோம்,” என்றும் ராம்மோகன் கூறினார்.