பிரபல தெலுங்கு குணச்சித்திர நடிகை பாவலா ஷியாமளா காலமானார்..!!
தெலுங்கு குணச்சித்திர நடிகை பாவலா ஷியாமளா(75), ஐதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு மாரடைப்பால் உயிரிழந்தார்.
முன்னதாக அவரிடம் போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் நிர்கதியாய் விட்டுச் சென்றனர். பின்னர் போலீசார் அவரை மீட்டனர். ஸ்யாமலா சாலையில் ஆதரவின்றி கிடந்த வீடியோ வைரலாகி பின்னர் தயாரிப்பாளர் தில் ராஜு முன்வந்து அவரின் மருத்துவ செலவுக்கு உதவினார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வரும் பாவாலா ஷியாமலா, 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தனது இயல்பான நடிப்பு மற்றும் நகைச்சுவை உணர்வுக்கு பெயர் போனவர் ஸ்யாமளா.
குறிப்பாக தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கோபிசந்த் (ஜெயம் பட வில்லன்) நாயகனாக நடித்து 2010 இல் வெளியான கோலிமார் படத்தில் ஸ்யாமளா இடம்பெற்ற நகைச்சுவை காட்சி தெலுங்கு சினிமா ரசிகர்கள் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரசித்தம்.

