பரப்புரையின் போது வாகனத்திலிருந்து குப்புற விழுந்த அமைச்சர் கே.டி.ஆர்

 
Telangana minister KTR Rao falls from vehicle during poll rally in Nizamabad

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் ரோட் ஷோவில் வாகனத்தின் மீது நின்று சென்றபோது அமைச்சர் கே.டி.ஆர் தவறி விழுந்தார்.

Video: Telangana Minister KT Rao Takes Tumble During Armoor Election Rally  | Elections News, Times Now

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ஆர்மூரில் தேர்தல் பிரசாரத்தில் தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆரின் மகனும் தகவல் தொழில்நுட்பத்துறை  அமைச்சருமான கே.டி.ராமாராவ் ரோட் ஷோ சென்றபடி வாகனத்தில் ​​சென்று கொண்டிருந்தார். அப்போது  டிரைவர் திடீரென பிரேக் போட்டதில் முன்னிருந்த கிரில் உடைந்து கீழே விழுந்தனர். 


இதில் அமைச்சர் கே.டி.ராமாராவ், ராஜ்யசபா எம்.பி. சுரேஷ் ரெட்டி, எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி ஆகியோர் கீழே விழுந்ததில் காயமடைந்தனர். இருப்பினும் யாருக்கும் எதுவும் ஆகவில்லை தனது உடல்நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கேடிஆர் தெரிவித்தார். பின்னர்  கோடாங்கலில் ரோட் ஷோவில் பங்கேற்க கேடிஆர் புறப்பட்டு சென்றார்.