இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - தெலங்கானா அரசு அதிகாரிகள் புகழாரம்!

 
stalin

தமிழகத்தில் காலை உணவுத் திட்டம் செயல்படும் விதம் குறித்து அறிய தெலங்கானா அரசு அதிகாரிகள் சென்னைக்கு வருகை தந்தனர். 
 
இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,  அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. இத்தகைய திட்டங்களில் ஒன்றான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது.2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1543 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்தக் கட்டமாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தினார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.


இந்தத் திட்டத்தின் மாபெரும் வெற்றி இந்தியா முழுக்க பெரும் வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் செயல்படுத்தும் அம்மாநில அரசு கொண்டிருக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசை தொடர்பு கொண்டு தமிழ்நாடு ஆர்வம் அரசின் காலை உணவுத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நேரில் வந்து பார்வையிட அம்மாநில உயர் அலுவலர்கள் ஆர்வம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தெலங்கானா மாநில கேட்டுக்கொண்டதன் பேரில் முதலமைச்சரின் அரசு தமிழ்நாடு அரசைக் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட தெலங்கானாவிலிருந்து மூத்த அரசு அதிகாரிகள் ஆகஸ்ட் 30, 2023 அன்று சென்னை வந்து சேர்ந்தனர். ஆகஸ்ட் 31, 2023 அன்று மைய சமையல்கூடம் ஒன்றுகும் பல்வேறு பள்ளிகளுக்கும் சென்று பார்வையிட்டனர்.