தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய தெலங்கானா அரசு..

 
tamilisai

தெலுங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என குற்றம் சாட்டி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மீது அம்மாநில  அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களுக்கும்,  மாநில அரசுக்கும் இடையே எப்போதும் மோதல் போக்கு இருந்து வருகிறது.  உதராணமாக தமிழகம், கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களைச் சொல்லலாம். மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு  ஆள்நர்கள் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது ஒவ்வொரு மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட  வன பல்கலைக்கழக மசோதா, பல்கலைக்கழகங்கள் வேலை நியமன வாரிய மசோதா, மோட்டார் வாகன வரி மசோதா உட்பட 10 மசோதாக்கள்  ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய தெலங்கானா அரசு..

ஆனால் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி முதல்  எந்த மசோதாவிலும் கையெழுத்திடவில்லை என்பது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவருக்கு எதிராக தெலுங்கானா தலைமை செயலாளர் ஏ.சாந்தகுமார் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சட்டபேரவையில் நிறைவேற்றப்படும்  மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சட்டவிரோதமான செயல்  என்று தெலுங்கானா அரசு தெரிவித்திருக்கிறது.  

இந்த விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் வழக்கத்திற்கு மாறான, சட்டவிரோதமான, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என்று அறிவிக்க வேண்டும் என தெலங்கானா அரசு நிதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.  மாநில ஆளுநர் அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அதிரடியாக தெரிவித்திருந்த நிலையில் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.