தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது

 
kavitha

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 

டெல்லியில் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் அம்மாநில துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும்  டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சந்தேகித்தது. 

இந்த நிலையில், டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக கவிதாவின் இல்லத்தில் இன்று வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில், கவிதா அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.