பீகார் எதிர்க்கட்சி தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு
Nov 17, 2025, 19:43 IST1763388781294
பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்று ஆட்சியை பிடித்த நிலையில், மகாகட்பந்தன் கூட்டணியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை வெற்றது. இதனையடுத்து ரகோபூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற தேஜஸ்வி யாதவ், பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நிதிஷ் குமார் வரும் வியாழக்கிழமை 10-வது முறையாக முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளது.


