ஓடும் பேருந்தில் நடத்துரை தாக்கிய இளைஞர்கள்..! சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தட்டித்தூக்கிய போலீஸ்..

 
ஓடும் பேருந்தில் நடத்துரை தாக்கிய இளைஞர்கள்..! சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தட்டித்தூக்கிய போலீஸ்..

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில்  நடத்துனர் மீது  தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.    

கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த திங்கள் கிழமை  இரவு (16-9- 24 )   9. 30 மணிக்கு தனியார் பேருந்து ஒன்று தஞ்சாவூருக்கு புறப்பட்டது.  அப்போது மதுபோதையில் பேருந்தில் ஏறிய  3  இளைஞர்கள்,  பெண்கள் இருக்கைக்கு பின்னால் அமர்ந்து தகாத வார்த்தைகளில் பேசி உள்ளனர். இதையடுத்து அவர்களை நடத்துனர் விகாஸ் (23) வேறு இருக்கைக்கு சென்று அமருமாறு தெரிவித்துள்ளார்.  அப்போது இடத்தை மாற்றி அமர முடியாது என நடத்துனரிடம்,  மது போதையில் இருந்த வாலிபர்கள் தெரிவித்துள்ளனர். உடனே நடத்துனர் பேருந்தை விட்டு கீழே இறங்குமாறு  கூறியுள்ளார். 

ஓடும் பேருந்தில் நடத்துரை தாக்கிய இளைஞர்கள்..! சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தட்டித்தூக்கிய போலீஸ்..

இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு போதை ஆசாமிகளும், நடத்துநரை சரமாறியாக தாக்கியுள்ளனர்.   இதில் படுகாயம் அடைந்த நடத்துனர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  பின்னர்  இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் நடத்துனர் விகாஸ்  புகார் அளித்தார். அதனை தொடர்ந்து பேருந்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நடத்துனரை போதையில் தாக்கிய உதயச்சந்திரன்( 33), ஜன சந்திரன்(30), ,தமிழ் நேசன் (29) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.  பின்னர் விசாரணையில் மூவரும் கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பின்னர்  மூன்று பேரையும் கைது செய்த போலீஸார்,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.