வெப்பத்தை தணிக்க கோக் குடித்த இளைஞர் பலி...! - இன்ஸ்டா-வில் மீண்டும் வைரலாகும் 2021-ன் உலுக்கிய சம்பவம்!

 
1

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கோடை வெப்பத்தை தணிப்பதற்காக 22 வயது இளைஞர் ஒருவர் வெறும் 10 நிமிடங்களில் 1.5 லிட்டர் கோகோ-கோலாவை அருந்தியதால் உயிரிழந்தார். அளவுக்கு அதிகமாக ஒரே நேரத்தில் குளிர்பானத்தை குடித்ததால், அவரது வயிற்றில் வீக்கமும் வாயு தேக்கமும் ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது.

சம்பவம் நடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி 18 மணி நேரத்திற்கு பின் பரிதாபமாக உயிரிழந்தார்.இது இப்போ நடந்ததா என்று கேட்டால் இல்லை... இது 2021ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் 

சில செய்திகள் நடந்து பல ஆண்டுகள் ஆனாலும், சமூக வலைதளங்களில் மீண்டும் மீண்டும் வைரலாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒரு சம்பவம், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் செய்தித் தளங்களால் மீண்டும் பகிரப்பட்டு உலக அளவில் காரசாரமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெறும் 10 நிமிடங்களில் 1.5 லிட்டர் கோகோ கோலா பானத்தைக் குடித்த 22 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக வெளிவந்த அந்த அறிக்கை, நம்ப முடியாத அளவிற்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

அறிக்கைகளின்படி, 2021-ல் கோடைக்கால வெப்பத்தைத் தணிக்க அந்த இளைஞர் 1.5 லிட்டர் கோகோ கோலா பாட்டிலைக் ஒரே மூச்சில் மிக விரைவாகக் குடித்து முடித்துள்ளார். குடித்த 6 மணி நேரத்திற்குப் பிறகு, அவருக்குக் கடுமையான வயிற்று வலியும், வயிறு வீக்கமும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் பெய்ஜிங்கில் உள்ள சாவோயாங் (Chaoyang) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு முன்பே எந்தவிதமான உடல்நலக் கோளாறுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர். ஆனால், அவரது ரத்த அழுத்தம் குறைந்து, இதயத் துடிப்பும் சுவாசமும் அபாயகரமான அளவில் அதிகரித்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் நடத்திய சிடி ஸ்கேன் (CT Scan) பரிசோதனையில், அவரது குடல் சுவர்களிலும், கல்லீரலுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் முக்கிய நரம்பிலும் (Portal Vein) அதிகளவிலான வாயு (Gas) தேங்கியிருந்தது தெரியவந்தது. இந்த திடீர் வாயுப் பெருக்கம் கல்லீரலுக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவைக் குறைத்து, 'ஹெபாட்டிக் இஸ்கீமியா' (Hepatic Ischemia) எனப்படும் கல்லீரல் முடக்கத்தை (Shock Liver) ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வாயுவை வெளியேற்றி கல்லீரலைக் காப்பாற்ற தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 18 மணி நேரத்திற்குள் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் செய்தி மீண்டும் வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகள் பலர் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், "என்னுடன் வேலை செய்த ஒருவர் தினமும் 2 லிட்டர் கொண்ட 12 கோகோ கோலா பாட்டில்களைக் குடிப்பார். அவருக்கு அது தீவிர பழக்கமாகவே மாறியிருந்தது" எனக் குறிப்பிட்டிருந்தார். மற்றொரு பயனர், "நல்லவேளை, நான் கோக் குடிப்பதையே நிறுத்திவிட்டேன்" எனக் பீதியுடன் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும், இந்தச் செய்தி மீண்டும் உலா வந்தாலும், சாதாரண அளவிலான கூல்டிரிங்ஸ் பயன்பாட்டிற்கான பொதுவான எச்சரிக்கை இதுவல்ல என்றும், இது 2021-ல் நடந்த ஒரு தனித்துவமான மருத்துவ வழக்கு என்றும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எந்தவொரு குளிர்Scope பானத்தையும் மிகக் குறைந்த நேரத்தில், மிக அதிக அளவில் ஒரே மூச்சில் குடிப்பது உடலின் செரிமான அமைப்பால் தாங்க முடியாத ஒன்று என்பதை மட்டுமே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.