அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது இளம்பெண் மரணம்- தாயின் இறுதிச்சடங்கில் குழந்தையும் உயிரிழப்பு

 
;ல்

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது  ரத்தப் போக்கு அதிகமானதால் தாய் உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக  சேர்க்கப்பட்ட துர்கா தேவி என்ற பெண்ணை திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி அலைக்கழித்ததால் உயிரிழந்ததாக உறவினர்கள் ஆம்பூர்- பேர்ணாம்பட்டு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு மருத்துவர் சியாமளா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட துர்கா தேவிக்கு பணியில் இருந்த செவிலியர்கள் தான் பிரசவம் பார்த்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தகவலின் பேரில் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பந்தபட்ட துர்கா தேவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ரத்தப் போக்கு அதிகமானதால் தாய் உயிரிழந்தார். தாய்க்கு இறுதிச்சடங்கு நடக்கும் நேரத்தில் குழந்தையும் திடீரென உயிரிழந்தது.