ஆண் நண்பர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய இளம்பெண் - விபரீதமாக முடிந்த விளையாட்டு!!

 
tt

சென்னை திருவல்லிக்கேணி மாடங்குப்பம் கெனால் சாலையை சேர்ந்தவர் பிரேம்குமார்.  இவர் நட்சத்திர விடுதியில் நீச்சல் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார் . இவருக்கு மகா என்ற இளம் பெண் தோழியாக இருந்துள்ளார்.  மகா அதே சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.  பிரேம்குமார் மற்றும் மகா இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில் தினமும் டீக்கடையில் நின்று பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.  நேற்றிரவு பிரேம்குமார் டீக்கடையில் நின்று மகாவுடன் பேசி வந்த நிலையில் அவரை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

tea shop

 அத்துடன் அங்கிருந்த கொதிக்கும் பாலை எடுத்து மகா மீது பிரேம்குமார் விளையாட்டிற்கு தெளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் மகா  கொதிக்கும் பாலை எடுத்து பிரேம்குமாரின் உடலில் ஊற்றியுள்ளார். இதனால் வலியில் துடித்த பிரேம்குமார் இளம் பெண்ணின் கையை முறுக்கியுள்ளார்.  

vv

இதை தொடர்ந்து  அங்கிருந்தவர்கள் உடனடியாக பிரேம்குமார் மற்றும் மகாவை மீட்டு சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இருவரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இளம்பெண் மகாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.