3 முறை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன காதலன்! தவிக்கும் இளம்பெண்

 
love

திருமண ஆசை வார்த்தை கூறி மூன்று முறை கர்ப்பமாக்கிய காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளம்பெண் திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தியாவில் கணவன் வெளிநாடு மனைவி கள்ளக்காதல் கொலையில் முடிந்தது - Today  Jaffna News - Jaffna Breaking News 24x7

திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி பகுதியைச் சேர்ந்த எட்வின் (27)என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஏஞ்சல் குளோரி (19) என்ற பெண்ணை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் பல இடங்களில் சுற்றித் திரிந்து தனிமையில் இருந்துள்ளனர். இதன்விளைவால் ஏஞ்சல் குளோரி, 2 முறை கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்யதாக கூறப்படுகிறது. 

இதை தொடர்ந்து இவர்கள் காதல் விவகாரம் எட்வின் வீட்டிற்கு தெரிய வர, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், முறைப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளூமாறு கூறியதையடுத்து பிரசன்னா என்ற அத்தை மகளை எட்வின் திருமணம் செய்து கொண்டார். எட்வின் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம்  நடந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து கேட்டு பிரிந்து  வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. 

தற்போது எட்வின் மனைவியை பிரிந்து வாழும் நிலையில், மீண்டும் ஏஞ்சல் குளோரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மீண்டும் அவர்கள் காதலிக்க தொடங்கினர். பின்னர் இருவரும் தனிமையில் இருந்ததையடுத்து ஏஞ்சல் குளோரின், 3வது முறை  கர்ப்பமானார். இதனையறிந்த எட்வின் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொள்ள மறுக்கும் எட்வின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மகளிர் காவல்துறையினர் தலைமறைவான காதலனை தேடி வருகின்றனர்.