நிச்சயிக்கப்பட்ட திருமணம் தள்ளிவைக்கப்பட்டதால் இளம்பெண் தற்கொலை

 
suicide

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த தென்னை மரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயம் செய்து வந்த இவருக்கு ஜானகி என்ற மனைவியும் மலர்விழி என்ற மகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கந்தசாமி உயிரிழந்த நிலையில், ஜானகியின் உறவுக்காரரின் மகனுக்கும், மலர் விழிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருகின்ற மே மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

Third NEET Suicide In Tamil Nadu In A Week, This Time, A 17-Year-Old Girl

இந்நிலையில் மலர்விழியின் பாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். தொடர்ந்து நெருங்கிய உறவினர்கள் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொடர்ந்து குடும்பத்தில் சோக நிகழ்வுகள் நடைபெற்றதால் மலர்விழியின் நிச்சயிக்கப்பட்ட  திருமணம் ஒரு வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மலர்விழி, இன்று மாலை வீட்டின் அருகே இருந்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக மலர்விழியை தேடிய அவரது தாய் ஜானகி. கிணற்றின் அருகே சடலமாக கிடந்த மலர்விழியை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனை அடுத்து பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மலர்விழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.