ஆபாச வீடியோ எடுத்து நகைக்கடை அதிபரை மிரட்டி பணம் பறித்த இளம்பெண் கைது

 
ஆபாச இணையதளங்களின் மாயவலையில் இருந்து தப்புவது எப்படி? டாக்டர் ஷாலினியின் ஓபன் டாக்!

சேலத்தில் ஆபாசமாக வீடியோ  எடுத்து நகைக்கடை அதிபரை மிரட்டி  பணம் பறித்த  இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

ஆபாச படம்

சேலம் அருகே பெரியார் பல்கலைக்கழகம் எதிரே கோட்டகவுண்டம்பட்டி ஹவுசிங் போர்டு வசந்தம் காலனியில்  வசிப்பவர் மோகனா (வயது 28). இவர் கணவனைப் பிரிந்து தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் மோகனாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வீரா (எ) வீரபாண்டியனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து நூதன முறையில் பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்தநிலையில் சேலம் ஜாகிர் அம்மாபாளையம் சுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் ராஜீவ் (49), நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். அவருடன் மோகனாவிற்கு  பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது  நகை அதிபர் ராஜீவிடம் பணம்  அதிகமாக உள்ளதை அறிந்த மோகனா, இதுகுறித்து  கள்ளக்காதலன் வீரபாண்டியனிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து  நகைக்கடை அதிபர் ராஜுவிடம் பணம் பறிக்க மோகனாவும், கள்ளக் காதலன் வீரபாண்டியனும் நூதன முறையில் நகை பணம் பறிக்க திட்டம் தீட்டியதோடு,  மோகனா, நகைக்கடை அதிபரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தங்களுக்கு 15 பவுன் நகை வேண்டும் என்று கூறியதோடு, தாங்கள் குடியிருக்கும் கோட்ட கவுண்டம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதிக்கு வரச் சொல்லி செல்போனில் பேசி உள்ளார் . 

பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டல் ! தன்னை டாக்டர் எனக் கூறி பல பெண்களை வலையில் வீழ்த்திய இளைஞர் !

இதனைத் தொடர்ந்து நகைக்கடை அதிபர் ராஜீவ், ராசிபுரத்தில் இருந்து 15 பவுன் நகையை எடுத்துக்கொண்டு சேலம் வந்துள்ளார். அப்போது மோகனா  தனது இருசக்கர வாகனத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து  ராஜீவ்வை தனது  வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் நகைக்கடை அதிபரை  வீட்டினுள் அழைத்து சென்றவுடன், வீட்டின் கதவை சாத்தியுள்ளார். இதனை அடுத்து நகையை பார்ப்பது போல, ராஜீவ் அருகே மிக  நெருக்கமாக சென்று, தனது சேலையை கழட்டி, நகைக்கடை அதிபரை கட்டிப்பிடித்துள்ளர். இந்த காட்சியை ஏற்கனவே திட்டமிட்டிருந்தப் படி ஜன்னல் வழியாக, கள்ளக்காதலன்  வீரபாண்டியன்,  தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் ஒன்றும் தெரியாதவர் போல வீட்டிற்குள் நுழைந்த வீரபாண்டியன், கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருந்த நகைக்கடை அதிபரை  பார்த்து, மிரட்டல் தொனியோடு  கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தனது செல்போனில் உள்ளது, இதை வெளியில் சொன்னால், உன் மானம், மரியாதை போய் விடும் என ராஜிவை  மோகனாவும், கள்ளக்காதலன் வீரபாண்டியனும்  மிரட்டியுள்ளனர்.

இதில் பயந்து போன நகைக்கடை அதிபர் ராஜீவ், இதனை வெளியில் சொல்ல வேண்டாம், இதற்காக தான்  என்ன செய்ய  வேண்டும்? என்று கேட்டுள்ளார். அப்போது அவரிடம் இருந்த இரண்டரை சவரன்  தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை பெற்றுக் கொண்டு ராஜீவ்வை வெளியே அனுப்பி உள்ளனர்.  இதனை அடுத்து நகைக்கடை அதிபர் ராஜீவ், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இதுகுறித்து  சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து  காவல் ஆய்வாளர் சசிகலா தலைமையிலான  போலீசார், உடனடியாக  இன்று  கோட்டக்கவுண்டம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருக்கும் மோகனா  வீட்டிற்கு சென்றனர். பின்னர் நகைக்கடை அதிபரை மிரட்டி நூதன முறையில் பணம் மற்றும் நகை பறித்த பெண் மோகனாவை  கைது செய்தனர். மேலும்  தலைமறைவாக இருக்கும் மோகனாவின் கள்ளக்காதலன் வீரபாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர்.