விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - பயணிகள் வாக்குவாதம்
மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட தயாரான ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது.
துபாயிலிருந்து இன்று (28.08.2025) காலை 5 மணிக்குப் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் மதுரை விமான நிலையத்திற்கு காலை 06:40 மணிக்கு வந்தடைந்தது. இதனையடுத்து இந்த விமானம் மதுரை விமான நிலையத்தில் இருந்து மதியம் 12. 20 மணிக்கு மீண்டும் துபாய்க்குப் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தொழில்நுட்பக்கோளாறு கண்டறியப்பட்ட நிலையில், ஓடுபாதையில்130 பயணிகளுடன் தயாராக இருந்த விமானம் நிறுத்திமிடம் திரும்பியது
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்ட நிலையில், நீண்ட நேரமாக விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்த விமானத்தில் இருந்த 130 பயணிகளும் பத்திரமாக விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்த பின்னர் மீண்டும் இந்த விமானம் துபாய்க்குச் செல்லும் என இந்திய விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
.

