4வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்! தரதரவென இழுத்து கைது செய்த போலீஸ்

 
ச் ச்

சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி 4 ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.


சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு சென்னையின் சிவானந்தா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் எதிராக செல்லும் சாலையில் அமர்ந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவும் மேலும் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதன் காரணமாகவும் நுங்கம்பாக்கத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த கைதியின் போது ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தால், அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கியும் தரதரவென இழுத்துச் சென்றும் பேருந்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். 

கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை தென் சென்னையில் பகுதிகளில் உள்ள கொட்டிவாக்கம் சமூக நலக்கூடம், திருவான்மியூர் சமூக நலக்கூடம் ஆகிய பகுதிகளில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். காமராஜர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்ட பொழுது காவல்துறையின் இருக்கும் ஆசிரியர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக காமராஜர் சாலை பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவியது