ஓயாத போராட்டம் - இடைநிலை ஆசிரியர்கள் கைது

 
s s

'சம வேலைக்குச் சம ஊதியம்' வழங்க வலியுறுத்தி சென்னையில் 17-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர்.

2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே  அடிப்படை  ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு  ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம் தான் கிடைக்கிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி  (எண். 311) அளித்தார். ஆனால், இப்போதுவரை ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. 

இதனால் 'சம வேலைக்குச் சம ஊதியம்' வழங்க வலியுறுத்தி ஆசிரியர்கள் சென்னையில் 17-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர்.