தேசிய நல்லாசிரியர் விருதுகளை இன்று வழங்குகிறார் குடியரசுத் தலைவர்!

ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. சில நாடுகளில் ஆசிரியர் தினமானது விடுமுறை நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் நாள் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஓர் ஆசிரியரான அவர் தனது நண்பர்களும் மாணவர்களும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என விரும்பியபோது அந்நாளை ஆசிரியர் நாளாக கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆசிரியர் தினமான இன்று தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்க உள்ளார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு. இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் விருது பெறுவோருக்கு சான்றிதழ் மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கப்பட உள்ளது.