ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு..!!

 
Q Q

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்றுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது

குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தகுதி பெற்ற தேர்வர்கள் பிப்ரவரி 2 மாலை முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) தகுதிப் பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வு அந்தந்த மாநிலங்களில் மூலம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. 2 தாள்கள் கொண்டு இத்தேர்வு நடத்தப்படும். முதல் தாள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை இரண்டாம் தாளும் நடத்தப்படுகிறது.

டெட் 2025 தேர்வு முடிவுகளை www.trb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம்.