ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

 
ட்

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

supreme court

ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும் அல்லது பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதி தேர்வின் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

அனைவருக்கும் தரமான, இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் கொண்டு வரப்பட்டது. 2012-ஆம் ஆண்டு அச் சட்டத்தில், ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் தகுதித் தேர்வில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள்  தொடுத்த வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. அதில் 5 ஆண்டுகளில் ஓய்வு பெறக்கூடிய ஆசிரியர்களை தவிர தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.