நள்ளிரவில் மாணவிக்கு வீடியோ கால்- பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது

 
rape

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்  மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த பட்டதாரி ஆசிரியரை போலீசார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.

rape

வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பரணி. இவர் அதே பள்ளியைச் சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதாகவும் மேலும் இரவு நேரத்தில் மாணவியின் செல்போனுக்கு வாட்ஸ்ஆப்பில் வீடியோ காலில் வருவதாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மாணவி பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதை அடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலவேடு கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த பட்டதாரி ஆசிரியரான பரணிக்கு கன்னத்தில் தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் காவல் நிலைய போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பட்டதாரி ஆசிரியர் பரணியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதை தொடர்ந்து மேலும் விசாரணையில் திருவண்ணாமலை குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலமாக மாணவியின் வாக்குமூலம் பெற்று
வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த பட்டதாரி ஆசிரியர் பரணியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.