புலி தாக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளி பலி!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லார்ஸ்டன் பகுதியில் புலி தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி லார்ஸ்டன் பகுதியில் புலி தாக்கி ஒருவர் உயிரிழந்தார். புலி தாக்கியதில் ரவி என்பவர் உயிரிழந்தார். ரவியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் கடந்த 9ஆம் தேதி இதே பகுதியில் புலி தாக்கி பாலசுப்பிரமணியம் என்பவர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் பலியானார். ஒரே மாதத்தில் 2 பேர் உயிரிழந்ததால் தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். உடலை 100 மீட்டர் தூரம் இழுத்துச்
சென்று முதுகு மற்றும் கை பகுதியை சாப்பிட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து வனத்துறை விசாரணை நடத்திவருகிறது.
கூடலூரில் 2 பேரை கொன்று, பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புலியை பிடிக்க தலைமை வனவிலங்கு பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார். தேவைப்பட்டால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும், புலியை பிடிக்க 44 இடங்களில் கேமராக்கள் பொருத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

