இன்று 232 வேட்பாளர்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்..!

 
1

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஏப். 30 ஆம் தேதி(வியாழக்கிழமை) 232 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்காக விஜய் நீங்கலாக 232 வேட்பாளர்களுக்கும் (231 தவெக வேட்பாளர்கள் + எடப்பாடி தொகுதி தவெக ஆதரவு சுயேச்சை) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இன்று சென்னையில் விஜயை சந்தித்து பேசவுள்ளனர்.ஏற்கனவே மண்டல வாரியாக எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பதை விஜய் சீனியர் நிர்வாகிகளுடன் ஆய்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.