மனைவியின் டார்ச்சரால் TCS ஊழியர் தற்கொலை - ஷாக்கிங் வீடியோ..!

 
1

 TCS ஊழியர் ஒருவர் தற்கொலை செய்வதற்கு முன்பு உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

 

தற்கொலை செய்து கொண்ட அந்த இளைஞரின் பெயர் பெயர் மானவ் சர்மா. (வயது 24). உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் வசித்து வந்த அவர் டிசிஎஸ் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 24ஆம் தேதி அன்று யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட அவர் பிணமாக கிடந்தார். அவர் மும்பை சென்று வந்த பிறகு இந்த விபரீத முடிவை மேற்கொண்டு இருக்கிறார். 

 

அவர் தற்கொலைக்கு முன்பு தனது செல்போனில் ஏழு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார். அதில் அவர் தனது மன போராட்டங்களை பற்றி பேசும் போது சில நேரங்களில் கதறி அழுததைப் பார்க்க முடிந்தது. அவர் மனைவி நிகிதா சர்மா உடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று டிபன்ஸ் காலனியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக மனைவி நிதிதாவை அவருடைய தாய் வீட்டில் இறக்கி விட்டு விட்டு சென்றார். மனைவி நிகிதா பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி தனது காதலனுடன் வாழ்வதற்கு ஆசைப்படுவதாக குற்றம் சாட்டி இருக்கிறார் மானவ் சர்மா. 

'தயவுசெய்து ஆண்களைப் பற்றியும் யாராவது பேசுங்கள்; அதுல் சுபாஷை போலவே டிசிஎஸ் மேலாளர் மானவ் சர்மாவும் தற்கொலை செய்து கொள்கிறார்..." என்று தொடங்கி  "என் கதையை நான் பகிர்ந்து கொள்கிறேன். அது தனித்துவமானது அல்ல என்றாலும் என்னைப் போலவே பலர் இருக்கிறார்கள். 

எனது மனைவிக்கு வேறொருவனுடன் தொடர்பு இருந்ததென கண்டறிந்தேன். ஆனால் நான் என்ன செய்ய முடியும்?  இனி அது ஒரு பொருட்டல்ல என்று ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட அப்துல் சுபாஷ் என்பவரை போலவே அந்த வீடியோவில் அவர் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் "ஆண்களின் போராட்டத்தை அங்கீகரிக்குமாறு அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அது பற்றி குறிப்பிடும் போது"இந்த செய்தி அதிகாரிகளுக்கு ஆனது. காவல்துறை சட்ட அமைப்பு ஆண்களுக்கும் ஒரு பாதுகாப்பு தேவை. விஷயங்கள் இப்படியே தொடர்ந்தால்.. ஆண்களுக்கும் ஒரு காலம் வரும் அப்போது பழியை ஏற்க யாரும் இருக்க மாட்டார்கள்"என்று மிகவும் நெகிழ்ச்சியோடு பதிவிட்டு இருக்கிறார். 

தயவு செய்து ஆண்களைப் பற்றி பேசுங்கள் அவர்கள் தனிமையில் இருக்கிறார்கள் என்றும் சர்மா குறிப்பிட்டு இருக்கிறார். பின்னர் தனது பெற்றோரிடமும் அவர் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அப்பா மன்னிக்கவும். அம்மா மன்னிக்கவும். ஆனால் இதை சரியா சரியாக புரிந்து கொள்ளுங்கள். நான் போனவுடன் எல்லாம் சரியாகிவிடும்‌ என் மரணத்திற்கு பிறகு எல்லாம் சரியாகிவிடும். என்னை விட்டு விடுங்கள் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார். 

"தொடர்ந்து இதை எப்படி சமாளிப்பது என்று இன்னும் நான் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன் ஆனால் நான் உங்களிடம் கெஞ்சி கேட்பதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் உள்ள ஆண்களை பற்றி சிந்தியுங்கள். நான் எப்போதும் விட்டுக் கொடுக்கும் ஒருவன் இதற்கு முன்பு பலமுறை என் வாழ்க்கையை முடிக்க முயற்சித்தேன் என இறுதியில் முடித்திருக்கிறார். 

இந்த குற்றச்சாட்டுகளை அவருடைய மனைவி நிகிதா சர்மா மறுத்து இருப்பதுடன் அவர் மது போதை மற்றும் மன நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் பலமுறை தனது கணவர் தற்கொலைக்கும் முயன்றதாகவும் தன்னையும் பலமுறை தாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.