மே 1ம் தேதி மதுபானக் கடைகள் மூடல் - நாமக்கல் ஆட்சியர் உத்தரவு!!

 
Tasmac

மே ஒன்றாம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

tasmac

தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள்என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. 

Tasmac

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உழைப்பாளர் தினமான மே தினத்தை ஒட்டி மதுபான கடைகள் மூடப்பட மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் இந்திய தயாரிப்பாக அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் , மதுக் கடைகளை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் நாளை மறுநாள் அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக் கடைகளை மூடவேண்டும் என்றும் , மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மது கூடங்களை திறந்தாலோ  அல்லது மறைமுகமாக விற்றாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.