ஜனவரியில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை - முழு விவரம் இதோ!!

 
Tasmac

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் முழு ஊரடங்கு தவிர இம்மாதம் மூன்று நாட்கள் மூடப்படும் என டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை : 2 நாள் டாஸ்மாக் வசூல் ரூ.417.18 கோடி!

கொரோனா பொதுமுடக்கத்தின் போது, டாஸ்மாக் மூடப்பட்டிருந்த நிலையில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.  பண்டிகை தினங்களில் மது விற்பனை கணிசமாக உயரும் நிலையில் புத்தாண்டு தினத்தன்று .ஒட்டுமொத்தமாக 147 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றது. சென்னை மண்டலத்தில் ரூ. 41.45 கோடிக்கும்  , திருச்சி மண்டலத்தில் ரூ.26.52 கோடிக்கும் என மதுபானம் விற்பனையாகியுள்ளது. 

tasmac

இந்நிலையில்  தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஜனவரி 15,18, 26ம் தேதிகளில் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், " ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் ,18ஆம் தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26ம் தேதி குடியரசு தினம் என்பதால் இந்த மூன்று நாட்களில் மதுபானம் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.  மதுபான விற்பனையில்லா  தினங்களாக இந்த நாட்கள் அனுசரிக்கப்படுகிறது என்பதால் இந்த மூன்று நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற பார்களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி சீல் வைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் தமிழகத்தில் ஞாயிற்று கிழமை   முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அன்றைய தினமும் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் நான்கு நாட்கள் டாஸ்மாக் மது கடைகள் அடைக்கப்படவுள்ளதால் மது பிரியர்கள் முன்கூட்டியே  மதுபானங்களை வாங்கி வைத்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.