இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது..! வெளியான முக்கிய அறிவிப்பு!

 
1 1

டாஸ்மார்க் ஊழியர்கள் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதலே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் கடந்த 23 ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிய வரும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வுதியும் கொடுக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யூ.சி, பாட்டாளி தொழிற்சங்கம், விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்கம் உள்ளிட்ட முக்கிய சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்து பல்வேறு போராட்டங்களை நடத்திய தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுடன், அரசு எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என்று தொழில் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக வேறு வழியில்லாமல் டாஸ்மார்க் கடைகளை மூடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

பிப்ரவரி 17ஆம் தேதி காலை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் யாரும் பணிக்கு வர மாட்டோம் என்றும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்குமா என்பது இன்னும் முடிவாகவில்லை. இதுகுறித்து தலைமையிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று அதன் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். ஒருவேளை அவர்களும் இணைந்தால், போராட்டம் மேலும் வலுவடையும். தமிழ்நாட்டில் தற்போது 4,749 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் சுமார் 23,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், மது விற்பனை முற்றிலுமாக முடங்கும் அபாயம் உள்ளது. அரசு உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.