டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும்..!

 
tasmac

மதுரையில் வரவிருக்கும் தேவர் ஜெயந்தி மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழாக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு, வரும் அக்டோபர் 27, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் தனியார் பார்களும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் மதுபான விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்படவுள்ளது.

தமிழகத்தின் முக்கிய நிகழ்வான முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில், வரும் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தேவர் குருபூஜை நிகழ்வில் விஜய் கலந்து கொள்வதால், இந்த நிகழ்வுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காக முதல்வர் விஜய் ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன்னுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர் குருபூஜை ஆகியவற்றை ஒட்டி மதுரை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் செயல்படாது எனத் தெரிவிகக்கப்பட்டுள்ளது.