இன்று கோவையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!
பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா உள் அரங்கம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் தற்காலிகமாக 'ரெட் ஜோன்' பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் இன்று இரவு 7 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் கோவை வருகை எதிரொலியாக, டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை கொடிசியா, பீளமேடு சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 15 டாஸ்மாக் கடைகள், 5 பார்கள், 18 (FL 2) உயர்தர பார்களை மூட கோவை கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


