மதுரையில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்

 
tasmac

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மதுரையில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.

tn

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து சிறை சென்றவரும், சமூக சேவை மேற்கொள்வதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவும் தனது இராணுவப் பணியை துறந்தவரும், பன்மொழிப் புலவருமான  இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

madurai

இந்நிலையில் இமானுவேல் சேகரனின் 66-வது நினைவு தினத்தை ஒட்டி மதுரையில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுபான சில்லறை விற்பனை கடைகள்,  விடுதியுடன் கூடிய பார்வை உள்ளிடவை மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.