#BREAKING டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 முன் பணம்
டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுக்கு ரூ.20,000/- பண்டிகைக்கால முன்பணம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்,. பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 மதுபானக் கடைகள் ஏற்கனவே மூடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை தீவிரமாக அமல்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு நவம்பர் 15 முதல் சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்க திட்டமுள்ள தவெக அரசு, முதற்கட்டமாக தகுதியுள்ள ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுக்கு ரூ.20,000/- பண்டிகைக்கால முன்பணம் வழங்க அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

