டாஸ்மாக் கடையடைப்பு - மது விலக்குத்துறை அதிகாரிகள் ஆலோசனை

 
s

முன்னறிவிப்பின்றி கடையடைப்பு செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.


பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக 157 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 136 கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டத்தில் உள்ள ஊழியர்களின் விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் சேகரித்து வருகிறது. அவர்கள் மீது சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்வது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டுவருகிறது.


இதனிடையே கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுதல், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.முன் அறிவிப்பின்றி கடையடைப்பு செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மது விலக்குத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.