”குடித்து எங்கள் குடும்பம் அழிந்தாலும் உங்கள் திராவிட குடும்பம் அழியக்கூடாது” மதுபிரியர்கள் போஸ்டர்

 
போஸ்டர்

நிலக்கோட்டை பகுதியில் மதுபான கடை குறித்து போஸ்டர் ஒட்டிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

விடியலுக்கு முன்பே மதுபாட்டிலை கையில் சேர்க்கும் திமுக… 'ஆட்சிக்கு  வந்தவுடன் முதல் கையெழுத்து சூப்பர்'… போஸ்டரால் பரபரப்பு! - Update News 360

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பல்வேறு இடங்களில் தமிழக அரசை விமர்சித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், “திமுக ஆட்சி அரசு பதவி ஏற்ற உடன் முதல் சிறப்பு கையெழுத்து என்ற தலைப்பில் அனைத்து ஊர்களிலும் தங்கள் கட்சியை சார்ந்தவர்கள் மூலம் சூரியன் விடிவதற்கு முன்பு மது பிரியர்களுக்கு விடிவு காலத்தை தந்த திராவிட முன்னேற்றக் கழகமே, குடியை குடித்து எங்கள் குடும்பம் அழிந்தாலும் உங்கள் திராவிட குடும்பம் அழியக்கூடாது” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது.

இவன் பூசாரிபட்டி அம்சா நகர் நிலக்கோட்டை தாலுகா என பரபரப்பாக  நிலக்கோட்டை பகுதிகளில் போஸ்டர் அச்சடித்து ஒட்டப்பட்டது. இதை நிலக்கோட்டை காவல்துறை சார்பு ஆய்வாளர் அருண் பிரசாந்த்  ரோந்து பணியில் ஈடுபட்ட போது போஸ்டரை பார்த்து அரசு அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய பூசாரிபட்டி, அம்சா நகர் சேல்ஸ்மேன் என்ற அமைப்பு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போஸ்ட்டர் ஒட்டியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.