“இரவு 10 மணிக்குள் டாஸ்மாக்கை மூடணும், அதன்பின் 1 நிமிடம் திறந்து இருந்தால் கூட கடும் நடவடிக்கை”- தமிழக அரசு அதிரடி
மதுபானக் கடைகள் பகல் 12 மணிக்கு முன்னதாகவோ, இரவு 10 மணிக்கு பின்னரோ 1 நிமிடம் திறந்து இருந்தால் கூட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அனைத்து காவல்துறைக்கும் பிறப்பித்துள்ள உத்தரவில், “மதுபானக் கடைகள் பகல் 12 மணிக்கு முன்னதாகவோ, இரவு 10 மணிக்கு பின்னரோ 1 நிமிடம் திறந்து இருந்தால் கூட கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மண்டலங்களிலும் 24 மணி நேரமும் ரோந்து மற்றும் கலால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். சட்ட விரோதமாக மது விற்கும் நபர்களை கண்காணிக்க மஃப்டியில் ரோந்து குழு அமைக்கப்பட்டுள்ளது. BAR மூடப்பட்டதை புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். கள்ள சந்தையில் மது விற்கப்படுவதை முழுவதுமாக தடுக்க வேண்டும்.
FL1 (TASMAC & ELITE TASMAC) கடைகள் இரவு 22.00 மணிக்குள் மூடப்பட வேண்டும். FL2 மற்றும் FL3 கடைகள் முறையே இரவு 23.00 மற்றும் 24.00 மணிக்குள் மூடப்பட வேண்டும். மேற்கண்டவற்றை Patrol, Gipsy Patrol, Additional Patrol மற்றும் Sector Beat Officers கண்காணித்து, புகைப்படங்களை குழுவில் பதிவிட வேண்டும். FL2 & FL3 கடைகள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் நேரத்தைத் தவிர, மேற்கண்ட விதிமுறைகள் மீறப்பட்டால், அதற்கான பொறுப்பு Patrol, Gipsy Patrol, Additional Patrol மற்றும் Sector Beat Officers மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

