மதியம் 12 மணிக்கு மேல் பூட்டு போட்டால் நடவடிக்கை - டாஸ்மாக் மேலாளர்களுக்கு பறந்த உத்தரவு!

 
Q

தமிழ்நாடு முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் திறக்க மாவட்ட மேலாளர்களுக்கு ஆணை!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் திறக்க மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கடைகளை திறக்க மறுத்தால், தற்காலிக பணியாளர்களை நியமித்து கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மதியம் 12 மணிக்குள் செயல்படுவதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.